பெரம்பலூர் மாவட்டத்தில், கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே, தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனிடையே வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க மாவட்டம் முழுவதும் தர்பூசணி பழங்களின் விற்பனை தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது.
பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், சங்கு பேட்டை, துறையூர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களின் விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் நீர்ச்சத்து மிகுந்து காணப்படும் தர்பூசணி பழங்களை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
ஒரு கிலோ முதல் 5 கிலோ வரை விற்பனையாகும் தர்பூசணி பழங்கள், 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நீர்ச்சத்து அதிகம் காணப்படும் தர்பூசணி பழங்களை, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எனப் பலர் வாங்கிச் செல்கின்றனர்.
இதையும் படிக்க:குண்டர் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது