ETV Bharat / state

குடிநீர் கோரி கிராம மக்கள் சாலைமறியல்...! - சாலைமறியல்

பெரம்பலூர்: குடிநீர் பிரச்னையை 20 நாட்களுக்கு மேலாக சரி செய்யாததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரம்பலூர்-துறையூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாலைமறியல்
author img

By

Published : Apr 20, 2019, 2:24 PM IST

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குரும்பலூர் பேரூராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கடந்த 20 நாட்களுக்கு மேலாக முறையான குடிநீர் வழங்கவில்லை.

இதனால் ஆவேசமடைந்த குரும்பலூர் பேரூராட்சி மக்கள் குடிநீர் பிரச்னையை சரி செய்யக்கோரி காலி குடங்களுடன் பெரம்பலூர்-துறையூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலின்போது குரும்பலூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கிராம மக்களிடம் சாலைமறியல் போராட்டத்தைக் கைவிடுமாறு கூறினர். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

பின்னர் பேரூராட்சி அலுவலர்கள் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதாக வாக்குறுதியளித்ததையடுத்து குரும்பலூர் பேரூராட்சி மக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

Intro:பெரம்பலூர் அருகே 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் பெரம்பலூர் to துறையூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Body:பெரம்பலூர் அருகே உள்ளது குரும்பலூர் பேரூராட்சி இந்த பேரூராட்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்நிலையில் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முறையான குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர் மேலும் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மாறாக பேரூராட்சி அதிகாரிகள் அநாகரீகமான வார்த்தைகள் பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது இதனிடையே ஆத்திரமடைந்த பொதுமக்கள் முறையான குடிநீர் வழங்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெரம்பலூர் டூ துறையூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் மேலும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்

Conclusion:சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக முடிவு எடுக்கப்பட்டது இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது மேலும் கோடை வெயிலில் அதிகமாக இருப்பதால் குடிநீர் பிரச்சினையை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்படுகிறது இந்த சாலை மறியலால் துறையூர் டூ பெரம்பலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.