பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள சிலோன் காலனி அருகே ஆண் சடலம் கிடந்துள்ளது. இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் காவலர்கள் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் திருச்சி மாவட்டம் பிகே அகரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பது தெரிய வந்துள்ளது.
அவர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இயங்கி வரும் டெய்லர் கடையில் டெய்லராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 4 நாட்களாக அளவுக்கதிகமாக மது அருந்தியதாக உடனிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். போலீசார் இவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.