பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தரணி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இவர் ஓட்டுநராக பணியற்றிவருகிறார். ஆலத்தூர் கேட் காலனியைச் சேர்ந்தவர் சித்திர குமார். இவர் தனியார் மோட்டார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்துவருகிறார்.
இந்நிலையில் சித்திர குமார் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு ஆலத்தூர் கேட் அருகே சாலையைக் கடந்து சென்றபோது நேர் எதிரே தனபால் இருசக்கர வகனத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.
இதில் சித்திர குமாரும் தனபாலும் நிகழ்விடத்திலேயே பலியாகினர். விபத்து குறித்து தகவலறிந்த பாடாலூர் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து இருவரின் சடலத்தை கைப்பற்றி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.