பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேரளி பேருந்து நிலையத்தில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவதுறையினர் இளைஞரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணி புரிந்து வருபவர் சரண்யா. இவர் அப்பகுதியில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்துவந்துள்ளார். இதற்கிடையே நேற்று (மே 26) இரவு சரண்யா காது வலி காரணமாக அவதிப்பட்டதாக தெரிகிறது.
அதன்பின் வழக்கம் போல் சரணயாவின் கணவர் அவரை எழுப்பிய போது, அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரு வேறு இடத்தில் இருவர் சந்தேகமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:இளம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு - ராஜஸ்தானில் நடந்த கொடூரம்!