ETV Bharat / state

இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி...யானை தந்தத்தால் ஆன சிற்பத்தின் பாகம் கண்டெடுப்பு - யானை தந்தம்

கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேடு பகுதியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி, யானை தந்தத்தால் ஆன சிற்பத்தின் பாகம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி
இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி
author img

By

Published : Sep 5, 2022, 8:40 PM IST

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகே மாளிகைமேடு பகுதியில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ராஜேந்திர சோழன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அரண்மனையில் மூன்றடுக்கு செங்கல் சுவர்கள் உட்பட பல்வேறு கட்டுமானப்பணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, மண் பானை, உடைந்த தங்க காப்பின் ஒரு பகுதி, ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சுமார் 60 சென்டிமீட்டர் அடி ஆழத்தில், 1.8 சென்டிமீட்டர் உயரமும்; 1.5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட யானை தந்தத்தால் ஆன, அழகான பொருள் ஒன்று நேற்று கிடைத்துள்ளது.

அந்தப்பொருள் மனித உடலின் இடுப்பிலிருந்து முழங்கால் வரை உள்ளது. இவை அரச பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களே பயன்படுத்தி இருப்பார்கள் என தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘போத்தராஜா’ சிற்பம் கண்டறியப்பட்டது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.