பெரம்பலூர்: அரியலூர் ரயில் நிலையம் அருகே வசித்து வருபவர்கள் நடராஜன் - உமா தம்பதி. நடராஜன் வெளிநாட்டில் உள்ளார். இவர்களின் மகள் நிஷாந்தினி. இவர் கடந்த ஆண்டு நடந்த +2 தேர்வில் 529.5 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் நீட் தேர்வுக்கு கடினமாக இருப்பதாகவும், தனது தந்தை இனி வெளிநாட்டில் கஷ்டப்படாமல் ஊரிலேயே வந்து தங்கி இருக்க வேண்டுமென்றும் கடிதம் எழுதி வைத்து விட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் இறந்த நிஷாந்தினியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள வ.கீரனூர் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், வ. கீரனூருக்கு நேரில் சென்று உயிரிழந்த நிஷாந்தினி சடலத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது பெற்றோர்களுக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கினார்.
இதையும் படிங்க: கும்பகோணத்தில் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு சீமான் மலர் தூவி மரியாதை