பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அத்தியூர் அருகேயுள்ள சாலையில் மூன்று புளிய மரங்கள், ஒரு பனை மரத்தினை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிப் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதனால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு காவல் துறையினர், வருவாய்த் துறையினர் சாலையின் நடுவே கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.
மேலும் மரங்களை வெட்டிய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அழிந்துவரும் பனை மரங்கள்: காக்கும் அரியலூர் இளைஞர்கள்!