வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் குடியரசு தினமான இன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய சங்கம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் அமைப்பு சார்பாக டிராக்டர் பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த பேரணிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் வானொலி திடலில் இருசக்கர வாகனம் மற்றும் டிராக்டர்களில் பேரணி நடத்த முயன்றனர். அவர்களிடம் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும் விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து மத்திய அரசை கண்டித்தும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐஜேகே மற்றும் திமுக விவசாய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனால் பழைய பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:டெல்லி போராட்டத்தில் வன்முறை...செங்கோட்டையில் ஏறி கொடி நாட்டிய விவசாயிகள்!