பெரம்பலூர் மாவட்டம் மேற்கு எல்லையில் திருச்சி, சேலம், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களை பசுமையால் ஒன்றிணைப்பது பச்சைமலை. பச்சைமலையை ஒட்டியுள்ளப் பகுதியில் உள்ளது மயிலூற்று அருவி. பெரம்பலூரிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் அம்மாபாளையம் கிராமத்திலிருந்து 6 கி.மீ தூரம் தொலைவில் உள்ளது.
ஐப்பசி கார்த்திகை மாத காலங்களில் பச்சைமலையில் மழை பெய்தால் நீர்வரத்து தொடங்கும். இதனிடையே, பச்சைமலை பகுதியில் பெய்து வரும் மழையால் மயிலூற்று அருவியில் நீர்வரத்து வரத்தொடங்கியது. இதனால், சுற்றுலாப் பயணிகள் தற்போது வரத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், இந்த அருவிக்கு செல்லும் பாதைகள் சீரமைக்கப் படாததால் பெரும்பாலோனோர் வருவதில்லை . மேலும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: