தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. மே மாதத்தில் அடிக்கும் அக்னி நட்சத்திர வெயில் போன்றே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் இருக்கிறது.
இதே போல் பெரம்பலூர் மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாத காலமாகவே 100 டிகிரிக்கு அதிகமாக வெயிலின் தாக்கம் இருந்து வந்துள்ளது.
இதனால் நீர்நிலைகள் வறண்டு போவதோடு விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடுமையான வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காக தர்பூசணி, கரும்பு ஜூஸ், மோர் போன்ற நீர் சத்து மிக்க பொருட்களை உண்டு சமாளித்து வருகின்றனர்.