பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சாந்தா,
நாடாளுமன்றத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன.
மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் 73 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 4 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகக் கருதப்பட்டு அங்குக் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்படும்.
தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கு 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. வாய் மொழியாகப் பெறப்படும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஆறு பறக்கும் படை அலுவலர்களும், ஆறு நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலை சுமுகமான முறையில் நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றார்.