ETV Bharat / state

'சின்னமுட்டம் நீர்தேக்கத் திட்ட பணிகளை விரைவில் துவங்குக..!' - விவசாயிகள் வலியுறுத்தல்

பெரம்பலூர்: "மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் சின்னமுட்டம் நீர்தேக்கத் திட்ட பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்" என்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகள் சங்க கூட்டம்
author img

By

Published : May 5, 2019, 4:18 AM IST

பெரம்பலூர், துறைமங்கலம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி நடராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சின்னமுட்டம் நீர்த்தேக்கத் திட்ட பணிகளை விரைவாக தொடங்க வேண்டும். இதனால் 100 கிராம மக்கள் பாசன வசதி பெற வாய்ப்பாக அமையும். கிடப்பில் போடப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்திற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவில்லை எனில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கொண்டு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். ஜவுளி பூங்கா திட்டத்தினையும் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்", என்றார்.

Intro:பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சினமுற்று நீர்த்தேக்கத்திட்ட பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் மாநில செயலாளர் சாமி நடராஜன் செய்தியாளர்களிடம் பேட்டி

Body:பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு கூட்டம் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி நடராஜன் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார் செய்தியாளரிடம் கூறியதாவது பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சின்னமுட்டம் நீர்த்தேக்கத்திட்ட பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் எனவும் இந்த சின்னமுட்டம் நீர்த்தேக்கத் திட்டத்தினை தொடங்கினால் 100 கிராம மக்கள் பாசன வசதி பெற வாய்ப்பாக அமையும் எனவும் மேலும் கிடப்பில் போடப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்திற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் திட்டத்தை செயல்படுத்த வில்லை என்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கொண்டு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் மேலும் ஜவுளி பூங்கா திட்டத்தினையும் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அவர் தெரிவித்தார்

Conclusion:கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் சாமி நடராஜன் மாநிலச் செயலாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.