ETV Bharat / state

தானியங்களில் ஐஸ்கிரீம்: அசத்தும் பட்டதாரி விவசாயி! - இயற்கை விவசாயம்

பெரம்பலூர்: சிறுதானிய வகைகளில் ஐஸ்கிரீம் செய்து லாபம் ஈட்டும் எம்.பி.ஏ. பட்டதாரி மாதேஸ்வரன் வேலைதேடும் பட்டதாரிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

தானியங்களில் ஐஸ்கிரீம் தயாரித்து அசத்தும் எம்.பி.ஏ பட்டதாரி!!.
author img

By

Published : Jul 17, 2019, 5:42 PM IST

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் முதுகலை வணிக நிர்வாகம் (எம்.பி.ஏ.) படித்துள்ளார். பட்டம் பெற்றவுடன் சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துவந்துள்ளார்.

இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட மாதேஸ்வரன் சென்னையில் பணிபுரிந்த வேலையை விட்டுவிட்டு சொந்த கிராமத்திற்கு வந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட மாவட்டமாகும். இங்கு மழையை நம்பி சாகுபடி செய்யப்படுகிறது. பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு அடுத்தபடியாக அங்கு பரவலாக சிறு தானிய வகைகளும் சாகுபடி செய்யப்படுகின்றன.

இதனால் மாதேஸ்வரன் தனது வயலில் குதிரைவாலி பயிர் சாகுபடி செய்தார். பின்பு மெள்ள மெள்ள சிறு தானிய வகைகளான கம்பு, கேழ்வரகு, சோளம் பயிர்களை பயிரிட்டு விற்பனை செய்தார். நாளடைவில் சிறு தானிய வகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சற்று வித்தியாசமாக சிந்தித்த மாதேஸ்வரன், சிறுதானிய வகைகளிலிருந்து ஐஸ்கிரீம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். குழந்தைகளுக்கு நேரடியாக சிறுதானிய வகைகள் கொடுத்தால் உண்ண மறுத்தாலும் அதனை ஐஸ்கிரீம் வடிவில் செய்து கொடுக்கும் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனால் கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட சிறுதானிய வகைகளிலும் ஐஸ்கிரீம் தயாரிப்பில் ஈடுபட்டுவந்தார். இவரின் புதிய முயற்சிக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதனால் பிரபலமடைந்த அவருக்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் முதல் திருமணம் உள்ளிட்ட பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகள் வரை ஐஸ்கிரீம் ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கின.

பொதுவான ஐஸ்கிரீம் வகைகளிலிருந்து மாறுபட்ட சுவையும் விலை குறைவும் கொண்ட இந்த ஐஸ்கிரீம் வகைகள் உடலுக்கு சத்துள்ள தானியத்தில் தயாரிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வாங்கிச் சென்று சாப்பிடுகின்றனர்.

பெரம்பலூர்
சிறுதானிய வகைகளில் ஐஸ்கிரீம்

மாதேஸ்வரன் மேலும் சிறிய ஐஸ்கிரீம் கடை வைத்து நடத்திவருகிறார். இளநீர், பழவகைகளிலிலும் ஐஸ்கிரீம் தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுவருகிறார்.

Intro:சிறுதானிய வகைகளில் ஐஸ்கிரீம் தயாரிப்பில் ஈடுபட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பு பெற்றுள்ள பெரம்பலூரை அசத்தும் எம்பிஏ பட்டதாரி அருந் தானியம் மாதேஸ்வரன்

Body:பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் எம்பிஏ பட்டதாரி எம்பிஏ பட்டம் பெற்றவுடன் சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் இரண்டு வருடம் பணிபுரிந்து வந்தார் இந்நிலையில் இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட மாதேஸ்வரன் சென்னையில் உள்ள சென்னையில் பணிபுரிந்த வேலையை விட்டுவிட்டு சொந்த கிராமத்திற்கு வந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டார் தமிழகத்தில் அரசியான மாவட்டமாக கருதப்படுவது பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும் இது மழையை நம்பிய மானாவாரி சாகுபடி செய்யப்படுகிறது பருத்தி மக்காச்சோளம் சின்னவெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு அடுத்தபடியாக பரவலாக சிறு தானிய வகைகளும் ஆங்காங்கே சாகுபடி செய்யப்படுகின்றன இதனிடையே இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட மாதேஸ்வரன் தனது வயலில் குதிரைவாலி பயிர் சாகுபடி செய்தார் தொடர்ந்து அதிகாரிகளின் ஊக்குவிப்பு காரணமாக அருந் தானியம் என்ற பெயரில சிறு தானிய வகைகளான கம்பு கேழ்வரகு சோளம் பயிர்களை முதலில் சிறிய கடை அமைத்து விற்பனை செய்து வந்தால் நாளடைவில் மாதேஸ்வரன் உடைய சிறு தானிய வகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என் பெயரில் புதிய முயற்சி ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய வகைகளில் ஐஸ்கிரீம் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார் குழந்தைகளுக்கு நேரடியாக சிறு தானிய வகைகள் கொடுக்கப்பட்டால் விரும்பி உண்ண மறுத்தாலும் அதை ஐஸ்கிரீம் வாயிலாக கொடுக்கும் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து கம்பு கேழ்வரகு சோளம் உள்ளிட்ட இந்த சிறுதானிய வகைகளில் ஐஸ்கிரீம் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார் மேலும் சிறுதானியங்களில் லட்டு கார வகைகளும் தயாரித்து வந்தார் மேலும் சீசனுக்கு தகுந்தாற்போல் பல்வேறு பலவகைகளிலும் ஐஸ்கிரீம் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த மாதேஸ்வரன் பலாப்பழம் சப்போட்டா பழம் உள்ளிட்ட பல வகைகளில் கிரீன் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார் இதனிடையே தற்பொழுது இளநீர் கொண்டு புதிய முயற்சியில் ஐஸ்கிரீம் தயாரிப்பில் ஈடுபட்டு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது இந்த ஐஸ் கிரீம் மூலம் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஐஸ்கிரீம் மொத்தமாகவும் சில்லரையாகவும் கொடுத்தனுப்புகிறார் மற்ற ஐஸ் கிரிம் வகைகளில் இருந்து மாறுபட்ட சுவையும் விலை குறைவு மற்றும் உடலுக்கு சத்தாக சத்துள்ளதாக உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வாங்கிச் சென்று ஐஸ்கிரீம் சாப்பிட்டு வருகின்றனர்

Conclusion:பெரம்பலூரில் அருண் தானியம் ஐஸ்கிரீம் வகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இது ஐஸ்கிரீம் ஆர்டரின் பேரில் அனுப்பப்படுகிறது பேட்டி மாதேஸ்வரன் சிறுதானிய ஐஸ்கிரீம் கடை பெரம்பலூர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.