குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று நல்ல ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதனையொட்டி இன்று சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவரம் கீழே:
- அன்பரசு உடற்கல்வி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி - செட்டிகுளம்
- பிரியா தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி - குன்னம்
- மலர்கொடி தலைமை ஆசிரியை, அரசு உயர்நிலைப்பள்ளி - இருர்
- சாலமன் முதுகலை ஆசிரியர், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி , களரம்பட்டி
- ராஜேஸ்வரி தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - அல்லிநகரம்
- சகோதரி சூசை மேரி பட்டதாரி தலைமையாசிரியர், ஆர்.சி. நடுநிலைப்பள்ளி - பாளையம்
- கதிஜா பேகம் இடைநிலை ஆசிரியர், தந்தை ரோவர் தொடக்கப்பள்ளி - பெரம்பலூர்
- குணா வள்ளி பட்டதாரி ஆசிரியர், டி.இ.எல்.சி. தொடக்கப்பள்ளி - துறைமங்கலம்
- முருகேசன் தலைமை ஆசிரியர், சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - கீழப்புலியூர்
- குணசேகரன் முதல்வர், ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம்
என 10 ஆசிரியர்களுக்கு இன்று சென்னையில் நடைபெறும் விழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. மேலும்,நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு - ஆசிரியர்கள், கல்வித் துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.