தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தயாளன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.
மருந்தாளுநர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும், தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை பொருட்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கிட வேண்டும், ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருபவர்களுக்குப் பணி வரன்முறை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.