தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் பெரம்பலூர் 3 ரோடு பகுதியில் ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
குடும்பன் காலாடி உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகள், பல ஜாதி பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ஏழு உட்பிரிவுகளையும் ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அரசாணை வெளியிட வேண்டும், மேலும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் சாதி பிரிவிலிருந்து நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் நடைபெற உள்ளது. போராட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.