ETV Bharat / state

7 வீடுகளில் யாரும் இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்

பெரம்பலூர்: யாரும் இல்லாத நேரம் பார்த்து அடுத்தடுத்து ஏழு வீடுகளில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

theft
theft
author img

By

Published : Jan 24, 2020, 3:17 PM IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை எசனை கிராமத்தில் வடக்குத்தெருவில் வரதராஜ், முருகேசன், ராஜேந்திரன், சேகர், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்களின் ஏழு வீடுகளில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில், சேகர் என்பவர் அரசுப் பேருந்து ஓட்டுநர், கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் ஆவர்.

இதனிடையே திருட்டுச் சம்பவம் நடைபெற்ற ஏழு வீடுகளிலும் யாரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. சொந்த வேலை காரணமாக இவர்கள் வெளியூர் சென்றுவிட்டு இன்று வீடு திரும்பியபோது, வீட்டில் உள்ள பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

திருட்டு நடைபெற்ற வீடுகள்

ஏழு வீடுகளிலும் நகை 24 பவுன், 50 ஆயிரம் ரூபாய் பணம், வெள்ளி பொருள்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பெரம்பலூர் பகுதியில் தொடர் திருட்டுச் சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மின் கணக்கீட்டாளர்... அழைப்பிதழ் கொடுக்கும் உறவினர்... பல கெட்அப்களில் திருடிய பெண்ணுக்கு சரமாரி அடி

Intro:
பெரம்பலூர் அருகே அடுத்தடுத்து 7 வீடுகளில் 24 பவுன் நகை,50. ஆயிரம் பணம் வெள்ளி பொருட்கள் திருட்டு. பொதுமக்கள் அச்சம்.
Body:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை எசனை கிராமத்தில் வடக்குத்தெருவில் வரதராஜ் , முருகேசன், ராஜேந்திரன் , சேகர், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 7 வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதில் சேகர் என்பவர் அரசுப் பேருந்து டிரைவராகவும், கிருஷ்ணமூர்த்தி அரசுப் பேருந்து டிரைவராக இருந்து ஒய்வு பெற்றவராகவும் உள்ளார்.
இதனிடையே திருட்டு சம்பவம் நடைபெற்ற 7வீடுகளிலும் யாரும் வீட்டில் இல்லை. சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்று விட்டு இன்று வீடு திரும்பிய போது திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது தெரிய வந்துள்ளது
மொத்தம் 5 வீடுகளில் 24 பவுன், 50 ஆயிரம் , வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.Conclusion:மேலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.