பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனிடையே பெரம்பலூர் அருகே எறையசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்ற விவசாயி வயலில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், அருகில் புல் மேய்த்துக் கொண்டிருந்த பசுமாடும் பலியானது. இச்சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்த விவசாயி வேலு உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வெற்றியோ தோல்வியோ தோனியை பின்பற்றுங்க - மதுரையில் மனம் திறந்த வாட்சன்