பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டகள் பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடற்பகுதியாக இருந்து பிறகு கடல் உள்வாங்கியதால் நிலப்பரப்பாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு கடற்பகுதியாக இருந்த போல கடலில் வாழ்ந்த பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் அவ்வப்போது மாவட்ட பகுதியில் கண்டறியப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் கல்மரங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்நிலையில் சாத்தனூர்- கொட்டரை ஓடைப்பகுதியில் ஆமை வடிவிலான கல்படிமம் ஒன்று பாதி புதையுண்ட நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சாத்தனூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் வந்து ஆமை வடிவ கல் படிமத்தை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
இதையும் படிங்க: பெரம்பலூரில் அமோனைட்ஸ் மையம் - 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினமா இது?