பெரம்பலூர் மாவட்டம் புது நடுவலூர் ஊராட்சி - புது நடுவலூர், மேட்டூர், வெள்ளனூர், பழைய சாத்தனூர், புது சாத்தனூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்களை உள்ளடக்கியது. இந்த ஊராட்சியில் இரண்டாயிரத்து 50 வாக்குகள் உள்ளன.
இங்கு ஊராட்சித் தலைவர், ஒன்பது ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.
ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று வேட்புமனுக்கள் தள்ளுபடியானது. மீதமுள்ள 8 வேட்புமனுவில் 7 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.
இதில், ஜெயந்தி நீல் ராஜ் என்பவர் ஊராட்சித் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊராட்சி மன்றங்களில் உள்ள ஒன்பது வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், ஒன்பது பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
புது நடுவலூர் ஊராட்சித் தலைவராக ஜெயந்தி நீல் ராஜ், வார்டு உறுப்பினர்களாக ஜமுனா, மனோகர், நித்யஸ்ரீ, கனகா, இளையராஜா, ரூபா, மகேந்திரன், ரஞ்சித், முசிறி உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியரைச் சந்தித்த கடம்பூர் ராஜூ!