கரோனா தொற்று காரணமாக மத்திய அரசும், மாநில அரசும் நிதித் தேவைக்காக பொதுமக்களிடம் உதவியை நாடியுள்ளது. இத்தருணத்தில் தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்.
![ஒரு மாத சம்பள காசோலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pbl-02-govt-teacher-corona-fund-script-vis-7205953_11052020122257_1105f_1589179977_1102.jpg)
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையன். இவர் கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் ஆசிரியர் பொன்னையன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம், தனது ஒரு மாத சம்பளமான 44 ஆயிரத்து 717 ரூபாயை கரோனா தடுப்பு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். ஆசிரியரின் இச்செயல் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளைக் குவித்து வருகிறது.