பெரம்பலூர் மாவட்டம் சங்குபேட்டை அருகே அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவத் துறை ஊழியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கிட வேண்டும், அறுவை அரங்கு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
ஊழியர்களுக்கு எட்டு மணி நேர வேலை உறுதி செய்திட வேண்டும், ஐந்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பல்நோக்கு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன" என்றார்.
பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவத் துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: