ETV Bharat / state

பெரம்பலூர் அரியலூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் கூட்டம்! - perambalur district news in tamil

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில் பெரம்பலூர் அரியலூர் மாவட்ட திமுக சார்பில் தமிழகம் மீட்போம், 2021 சட்டப்பேரவை பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.

tamilagam meetpom dmk meeting held in  perambalur
பெரம்பலூர் அரியலூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் கூட்டம்
author img

By

Published : Jan 1, 2021, 6:48 AM IST

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில் பெரம்பலூர் அரியலூர் மாவட்ட திமுக சார்பில் தமிழகம் மீட்போம், 2021 சட்டப்பேரவை பொதுக்கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் திமுக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் திமுக நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 220 திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது காணொலி காட்சி மூலம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "பெரம்பலூர் மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் காவிரி கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம், கேந்திரிய வித்யாலயா, குரும்பலூர் அரசு கலைக்கல்லூரி, கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் சிறப்பு பொருளாதார மண்டலம், ஜவுளி பூங்கா, அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டன" என தெரிவித்தார்.

tamilagam meetpom dmk meeting held in  perambalur tamilagam meetpom dmk meeting held in  perambalur
மூத்த நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட பொற்கிழி

இதையும் படிங்க: மாணவிகள் மழையில் நனையும் போது எனக்கு மட்டும் குடை எதற்கு ? - பாதுகாவலரை கடிந்த அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.