பெரம்பலூர் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்த செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
’*2006ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலையில் உள்ளதைப் போல சாலை ஆய்வாளர்கள் அனைவருக்கும் சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நிலை ஊதியத்தில் மாற்றம் செய்து வழங்க வேண்டும்,
* பதவி உயர்வு வழங்க வேண்டும்.
* டிப்ளமோ முடித்த சாலை ஆய்வாளர்களுக்கு இளநிலைப் பொறியாளர் பதவி வழங்க வேண்டும்.
*2018ஆம் ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்’
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் சாலை ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.