தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை மற்றும் பெரம்பலூர் மாவட்ட சவகர் சிறுவர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும், கோடை காலங்களில் சிறுவர் - சிறுமியர்களுக்கென நுண்கலை பயிற்சி முகாம் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நிகழாண்டுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று தொடங்கியது.
வரும் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த பயிற்சி முகாமில், 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு சிலம்பம், இசை, பரதநாட்டியம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த முகாமின் நிறைவு நாளன்று, பயிற்சி எடுக்கும் ஒவ்வொறு குழந்தைக்கும் கலை பண்பாடுத்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.