ETV Bharat / state

பெரம்பலூரில் பழமையான கல்மரப் படிமம் கண்டெடுப்பு! - கல்மரப் படிமம்

பெரம்பலூர்: சாத்தனூர் அருகே 80 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு பழமையான கல்மரப் படிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

stone
stone
author img

By

Published : Jun 18, 2020, 7:12 PM IST

Updated : Jun 18, 2020, 9:11 PM IST

அரியலூர் பகுதியில் இந்திய புவியியல் ஆய்வுத்துறைக்கு தலைமையேற்ற முதல் இந்தியரான எம்.எஸ்.கிருஷ்ணன் என்பவர், 1940ஆம் ஆண்டு ஆய்வு செய்தபோது, பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் 700 மீட்டர் கொண்ட ஓடைப்படுகை ஒன்றில், 18 மீட்டர் நீளம் கொண்ட கல்மரம் ஒன்றை கண்டறிந்தார். இவ்வகை மரங்கள் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவையாகும். ஆசியாவிலேயே மிகப்பெரிய கல்மரமாகவும் அது உள்ளது. 18 அடி நீளமுள்ள கல் மரத்தை இந்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் கடல் நீரால் சூழப்பட்டு இருந்ததாகவும், புவியியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அக்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களும் மரங்களும் இயற்கை சீற்றங்களால் மண்ணில் புதையுண்டு, பிற்காலத்தில் பாசில்ஸ் எனப்படும் படிமங்களாக கண்டறியப்பட்டு, தற்போது இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கல்மர படிமத்தை பார்வையிடும் இளைஞர்கள்
கல்மரப் படிமத்தை பார்வையிடும் இளைஞர்கள்

இந்நிலையில், சாத்தனூரில் உள்ள கல்மரப் பூங்காவில் 80 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் கல்மரப் படிமத்தை போன்று சாத்தனூர் கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடிக்காடு என்ற கிராமத்தில், விவசாய நிலப்பரப்பில் சுமார் 100 சென்டிமீட்டர் நீளமும் 60 சென்டிமீட்டர் விட்டமும் கொண்ட கல்மரப் படிமம் ஒன்று கிடைத்துள்ளது.

அகழ்வாய்வு செய்ய மக்கள் கோரிக்கை

இந்த கல்மரப் படிமம் சாத்தனூர் கிராமத்திலுள்ள பூங்காவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், பல கோடி வருட பழமையான புவியியல் தகவல் நிறைந்த இந்தப் பகுதியை அகழ்வாய்வு செய்ய வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 64ஆக குறைந்தது!

Last Updated : Jun 18, 2020, 9:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.