பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் நெய் குப்பை கிராமத்தில் தங்கராசு என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் அதிமுக மாவட்ட அவைத் தலைவர் துரை, அமைப்பு சாரா அணி பொறுப்பாளர் முத்துச்சாமி, தங்கராசு ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அதிமுக நிர்வாகிகளை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து பலத்த காயமடைந்த அதிமுக பிரமுகர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இச்சம்பவ குறித்து வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் காவல் துறையினர் தாக்குதல் நடத்தியவர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சந்தைக்குப் போனவர்களை சண்டைக்கு இழுத்த குளவி!