ETV Bharat / state

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் 'ரஞ்சன்குடி கோட்டை' - ரஞ்சன்குடி கோட்டையை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பெரம்பலூர்: சுற்றுலா தலமான ரஞ்சன்குடி கோட்டை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால், அதை மேம்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

ரஞ்சிக் கோட்டை
author img

By

Published : Sep 27, 2019, 3:27 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில், லாடபுரம் மயிலூற்று அருவி, சாத்தனூர் கல்மர பூங்கா மற்றும் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோயில் எனப் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனிடையே அங்கு வரலாற்று ரீதியாக பெருமை சேர்ப்பது பெரம்பலூரிலிருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ள ரஞ்சன்குடி கோட்டையே. இதற்கு "துருவ கோட்டை " என்ற மற்றொரு பெயரும் உண்டு.

பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ரஞ்சன்குடிகோட்டை

கருங்கல் சுவர்களால் அமைக்கப்பட்டு மிக கம்பீரமாகக் காட்சி அளிக்கும் இந்த ரஞ்சன்குடி கோட்டை. தற்பொழுது தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இந்த கோட்டை, 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் தூங்கானை மறவன் என்ற குறுநில மன்னரால் கட்டப்பட்டதாகவும், 1751ஆம் ஆண்டு ’சந்தா சாகிப்’ எனும் பிரெஞ்சு கூட்டுப்படைக்கும், முகமது அலி - ஆங்கிலேய கூட்டுப்படைக்கும் நடந்த "வால் கொண்டா போர்" இந்த ரஞ்சன்குடி கோட்டையை மையமாக வைத்து நடந்ததாகவும் வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் இவ்வளவு சிறப்பு மிக்க இந்த கோட்டை புனரமைக்கப்படாமலும் முறையான பாதுகாப்பு வசதி இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர் . இந்தக் கோட்டையைச் சுற்றி புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படியுங்க:

மான் வேட்டையாடிய வழக்கு: கேங்ஸ்டருக்கு பயந்து நீதிமன்றம் வராத சல்மான் கான்!

Intro:பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலா தலமான "ரஞ்சன்குடி கோட்டை "மேம்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.Body:இன்று உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்த்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில், லாடபுரம் மயிலூற்று அருவி, சாத்தனூர் கல்மர பூங்கா மற்றும் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோவில் என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனிடையே வரலாற்று ரீதியாக பெருமை சேர்ப்பது ரஞ்சன்குகுடி கோட்டை.
பெரம்பலூரிலிருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ளது. ரஞ்சன் குடி கோட்டை.
இதற்கு "துருவ கோட்டை " என்ற மற்றொறொரு பெயரும் உண்டு.
மிக கம்பிரமாக காட்சி அளிக்கும் இந்த ரஞ்சன்குடி கோட்டை கருங்கல் சுவர்களால் அமைக்கப்பட்டதாகும். மேலும் தற்பொழுது தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
16-ம் நூற்றாண்டில் இறுதியில் தூங்கானை மறவன் என்ற குறுநில மன்னரால் கட்டுமான பணிகள் நடைபெற்றதாகவும் 1751- ம் ஆண்டு சந்தா சாகிப் பிரெஞ்சு கூட்டுப்படைக்கும், முகமது அலி - ஆங்கிலேய கூட்டுப்படைக்கும் நடந்த "வால் கொண்டா போர்" இந்த ரஞ்சன்குடி கோட்டை மையமாக வைத்து நடந்த தாக வரலாற்று ஆதாரங்கள் கூறப்படுகிறது.
இதனிடையே சிறப்பு மிக்க இந்த கோட்டை புணரமைக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டுகின்றனர் . முறையான பாதுகாப்பு வசதி இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது Conclusion:வரலாற்று சிறப்பு மிக்க இந்த ரஞ்சன்குடி கோட்டையை புணரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.