பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் குமார். இவருடைய மகள் பிரியதர்ஷினி, அப்பகுதியிலுள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில் இவரது குடும்பத்தினரிடையே தொடர்ந்து பிரச்னை நடந்துவந்ததாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனியாக இருந்த பிரியதர்ஷினி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பிரியதர்ஷினியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாணவி தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.