ETV Bharat / state

மூங்கில், பிரம்பு பொருட்கள் விற்பனை மந்தம் - தயாரிப்பாளர்கள் வேதனை - மூங்கில் விலையில் மந்தம் வியாபாரிகள் சோகம்

பெரம்பலூர்: மூங்கில் மற்றும் பிரம்பால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனையில் மந்தம் ஏற்பட்டுள்ளதால் வியாபாரிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

slumb and bamboo
slumb and bamboo
author img

By

Published : Nov 27, 2019, 10:16 PM IST

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள துறையூர் சாலையில் சென்னை ஊரப்பாக்கம் பகுதியிலிருந்து சுமார் ஐந்து குடும்பங்கள் பிரம்பு மற்றும் மூங்கில் உள்ளிட்டவைகளை கொண்டு பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்

சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் தங்களது வியாபாரத்தை தொடங்கிய வியாபாரிகள் நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக ஆக்கிரமிப்பு நடைபெற்றதால் அங்கு வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், அவர்கள் அனைவரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கேயே குடிசையமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் முக்கியமான இடங்களுக்கு சென்று இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை தங்கியிருந்து தங்களது வியாபாரத்தை செய்து வருகின்றனர். இதனிடையே, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.

மூங்கிலால் செய்யப்பட்ட பொருள்
மூங்கிலால் செய்யப்பட்ட பொருள்

அங்கு மூங்கில் மற்றும் பிரம்பால் செய்யப்பட்ட நாற்காலிகள், கூடை வகைகள், குழந்தை தொட்டில் , குழந்தை நாற்காலி மற்றும் கோயிலுக்கு செல்வதற்காக எடுத்துக் கொண்டு செல்லக்கூடிய பூஜை கூடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நேர்த்தியாகவும் அழகாகவும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

மூங்கிலால் செய்யப்பட்ட விற்பனை பொருட்கள்

200 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து வந்த நிலையில் தற்பொழுது வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. நாடோடியாக ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் அவர்கள் வியாபாரம் சரியாக இருந்தால் மட்டுமே தங்களுடைய வாழ்வாதாரம் சிறக்கும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரில் பண மோசடி - காவல் ஆணையரிடம் புகார்

Intro:பெரம்பலூரில் மூங்கில் மற்றும் பிரம்பால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை மந்தம் வருத்தத்தில் வியாபாரிகள்

Body:பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் துறையூர் சாலையில் சென்னை ஊரப்பாக்கம் பகுதியிலிருந்து சுமார் ஐந்து குடும்பங்கள் வந்து பிரம்பு மற்றும் மூங்கில் உள்ளிட்டவைகளை கொண்டு பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர் சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் தங்களது வியாபாரத்தை தொடங்கிய வியாபாரிகள் நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக ஆக்கிரமிப்பு நடைபெற்றதால் அவர்களால் அங்கு வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கேயே குடிசை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு மாதம் அல்லது மூன்று மாதம் என தங்கியிருந்து தங்களது வியாபாரத்தை செய்கின்றனர் இதனிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்த இவர்கள் தற்பொழுது மூங்கில் மற்றும் பிரம்பால் செய்யப்பட்ட நாற்காலிகள் கூடை வகைகள் குழந்தை தொட்டில் குழந்தை நாற்காலி மற்றும் கோவிலுக்கு செல்வதற்காக எடுத்துக் கொண்டு செல்லக்கூடிய பூஜை கூடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நேர்த்தியாகவும் அழகாகவும் செய்து வருகின்றனர் ரூபாய் 200 முதல் 2000 ரூபாய் வரை விற்பனை செய்பவர்கள் தற்பொழுது வியாபாரம் மந்தநிலையில் ஏற்பட்டதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் நாடோடியாக ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் அவர்கள் வியாபாரம் சரியாக இருந்தால் மட்டுமே தங்களுடைய வாழ்வாதாரம் சிறக்கும் என்று வேதனை தெரிவிக்கின்றனர் மேலும் இவர்கள் செய்வது மட்டுமல்லாமல் பி ரம்பு மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்கள் அசாம் மாநிலத்தில் இருந்து வாங்கி வந்தும் விற்பனை செய்கின்றனர்

Conclusion:பேட்டி தர்மா மூங்கில் பொருட்கள் தயாரிப்பவர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.