பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள வன அலுவலகத்தில் வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் கருவேல மரங்கள் ஏலம் விடும் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஒப்பந்ததாரர்கள் கருவேல மரங்களை ஏலம் விடுவதில் முறைகேடு நடப்பதாக கூறி வன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு சிலருக்கு மட்டுமே தொடர்ந்து கருவேல மரங்கள் ஏலம் விடுவதாக ஒப்பந்ததாரர்கள் வன அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து வன அலுவலர்கள் ஒப்பந்ததாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மீண்டும் கருவேல மரங்கள் ஏலம் விடப்பட்டது.
இதையும் படிங்க: வன உயிர்களைப் பாதுகாக்க தடய அறிவியல் துறை அலுவலகம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு