பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலிகை செடிகளை வளர்ப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு அருகே உள்ள இடத்தில் மூலிகை செடிகளை வளர்க்க தோட்டம் அமைத்து செயல்படுத்தி வருகின்றனர்.
தற்போது தோட்டத்தில் முறிகூட்டி இலைச் சாறு, ஆடாதொடா, அக்கிரகாரம், திருநீற்று பச்சிலை, நாகமல்லி
பிரண்டை, கருந்துளசி, துணித்து பச்சிலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளை மாணவ-மாணவிகள் முறையாக பராமரித்து வருகின்றனர்.
இப்பள்ளிக்காக ரூ. 25 ஆயிரம் மதிப்பீட்டில் தேசிய மூலிகை தோட்ட வாரியம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை, மூலிகை தோட்டத்தை பராமரித்து வருகின்றது. கல்வியோடு சேர்த்து மூலிகை வளர்ப்பதிலும் இப்பள்ளி செயல்படுவதால் மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.
இதையும் படிங்க: 'மூலிகை நாற்றுகள் ரூ. 10 மட்டுமே' - இது மூலிகைப் பண்ணை விலை நிலவரம்!