விவசாயத்தை முதன்மையாக கொண்டு விளங்கும் மாவட்டம் பெரம்பலூர். இப்பகுதியில் மழையை நம்பியே பெருவாரியான மானவாரி நிலங்களில் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இதனிடையே இந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெல்லை அறுவடை செய்து, கதிர் அடிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இயந்திரம் எதுவும் இல்லாமல் மனித உழைப்பை பெரிதும் நம்பி, நெல் கதிர்களை அடித்து வரும் காட்சி காண்போரை வியக்க வைக்கிறது.
மேலும் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு டெல்டா பகுதி முழுவதும் பரவலாக நெல் சாகுபடி செய்திருப்பது பெரு மகிழ்ச்சியளிக்கிறது.