தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், பெரம்பலூர் நான்கு ரோடு அருகே, நிலை கண்காணிப்புக் குழுவினர், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூரைச் சேர்ந்த வரதராஜன் என்பவரிடமிருந்து, உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை நிலைக் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல்செய்தனர். வரதராஜன் என்பவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள, ரிலையன்ஸ் பெட்ரோல் சேமிப்பு நிலைய ஒப்பந்ததாரராக உள்ளார்.
இவரிடமிருந்து பறிமுதல்செய்த 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜாவிடம் ஒப்படைத்தனர். மேலும் இப்பணத்தின் வருவாய் விவரம் குறித்து வருமானவரித் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை! - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!