பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோய்த்தடுப்பு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மருத்துவர் தரேஷ் அகமது ஆய்வுமேற்கொண்டார். அப்போது மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் அளிக்கப்பட்டுவரும் மருத்துவம் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆய்வு
பின்னர் புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவினைப் பார்வையிட்டு அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதி, கழிப்பிட வசதி, அவசர சிகிச்சைப் பிரிவில் வழங்கப்பட்டுவரும் உயிர்காக்கும் மருத்துவ வசதிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
அதனைத்தொடர்ந்து, கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுவரும் மருத்துவ வசதிகள், புதிதாக ஏற்படுத்தப்பட்டுவரும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திர கொள்கலன், அதில் கூடுதலாக மேம்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்தும், மருத்துவமனையில் மருந்தக கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மருந்துப் பொருள்கள் இருப்பு, விநியோகம் செய்யப்படும்விதம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.