பெரம்பலூர் மாவட்டம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி என்பவருக்குச் சொந்தமான சினை பசு, அதே பகுதியில் ஏரிக்கரை பகுதியை ஒட்டி வயலில் புல் மேய்த்த போது, அருகில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது.
இதனால் பதறிப் போன தங்கசாமி, இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், சம்பவம் நடந்த இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, கிணற்றில் விழுந்த சினை பசுவை கயிற்றால் கட்டி பத்திரமாக மீட்டனர்.
மேலும், கிணற்றில் விழுந்த சினை பசுவை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பொது மக்களும், விவசாயிகளும் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொருளாளர் பதவியைத் துறந்த துரைமுருகன்: 'அடுத்தது பொ.செ.தான்' - அடித்துக்கூறும் உ.பி.க்கள்!