பெரம்பலூர், வேப்பந்தட்டை ஆகிய இரு வட்டாரங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான சதுரங்க போட்டி பெரம்பலூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள் அரங்கன் தலைமையில் தொடங்கிய இப்போட்டியில் இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
11 வயது, 14 வயது, 17 வயது என மூன்று பிரிவுகளாக மாணவர்கள் மற்றும் மாணவிகள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்வர்கள் என அரசுப்பள்ளி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.