பெரம்பலூர் மாவட்ட காவல்துறை ஆயுதப்படை வளாகத்தில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாகனங்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் முதல் கட்டமாக 370 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது முதலுதவிப்பெட்டி அவசரகால தீயணைப்பு தடுப்பு சாதனம், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அத்தியாவசியப் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்யப்பட்டன.