பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் இரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சவீதா. இவர் சிறுகன்பூர் அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், தான் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால் தன்னுடைய சொந்த ஊரான இரூர் கிராமத்தில் பணியிட மாறுதல் தர வேண்டுமென கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதனைத்தொடர்ந்து அலுவலர்கள் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் நேற்று (செப்.21) இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியர் அலுவலகத்தில் நிறைமாத கர்ப்பிணி தர்ணா போராட்டம் - கர்ப்பிணி பெண் தர்ணா
பெரம்பலூர்: பணியிட மாறுதல் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வரும் நிறைமாத கர்ப்பிணி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.