பெரம்பலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் முத்துக்குமார். இவர் மார்ச் 8ஆம் தேதியன்று நகர்ப்புற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதனிடையே துறைமங்கலம் பகுதியில் தனியாக இருந்த சிறுமியுடன் ஒருவர் பேசிக்கொண்டு இருந்ததைக் கண்ட முத்துக்குமார், அந்நபரை அழைத்து விசாரித்தார்.உடனே சிறுமியிடம் தனியாகப் பேசிய நபர் துறைமுகம் மூன்று வழிச் சாலையில் மது போதையில் இருந்த அவரின் நண்பர்களை அழைத்து வந்தார்.
அவர் தலைமைக் காவலரை தகாத வார்த்தையில் பேசிவிட்டு, ‘தான் வழக்கறிஞர்' என்று மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். மேலும் மது போதையில் உள்ளவர்கள் தலைமைக் காவலரை பணி செய்யவிடாமல் இருந்ததாகவும் தெரிகிறது. தற்போது இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க; ’கொரோனா பாதிப்பு இல்லை’- சான்று இல்லாமல் இத்தாலியில் தவிக்கும் இந்திய மாணவர்கள்!