சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 20 நபர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் ஒன்று, பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு கிராமம் அருகே ஓட்டுநரின் கவனக்குறைவால் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த நபர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் புண்ணியமூர்த்தி, தலைமை காவலர் ரவி, இரண்டாம் நிலை காவலர்கள் ஆனந்த், ஜெயராஜ் ஆகியோர்கள் துரிதமாக செயல்பட்டு விபத்தில் சிக்கியவர்களை காப்பற்றி முதலுதவி அளித்தனர்.
அதன்பின் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. காவல்துறையினரின் இந்த துரித நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து மூன்று சரக்கு லாரிகள் மோதி விபத்து - ஓட்டுநர் படுகாயம்