கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களின் பிள்ளைகளுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேல் நிலை கல்வி பயில்வதற்கான உதவித் தொகை வழங்கப்பட்டது.
இதனை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் வழங்கினார். மேலும் காவலர்களின் பிள்ளைகள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென வாழ்த்தினார். இந்த நிகழ்வில் காவல் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பெரம்பலூரில் வலிப்பு ஏற்பட்டு ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு