ETV Bharat / state

தமிழ் இல்லாத பெயர் பலகைகள் கருப்பு மை கொண்டு அழிக்கப்படும்: ராமதாஸ் எச்சரிக்கை

ஆங்கில வழி கல்வி நிறுவனங்கள் புற்று ஈசல் போல ஆங்காங்கே முளைத்து தமிழை சீரழிக்கிறது. ஆகையால் தமிழ் இல்லாத பெயர் பலகைகள், கருப்பு மை கொண்டு அழிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்
ராமதாஸ்
author img

By

Published : Mar 2, 2023, 10:36 AM IST

ராமதாஸ் எச்சரிக்கை

பெரம்பலூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தமிழைத் தேடி என்ற பிரச்சார பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து நேற்று (மார்ச். 1) மதுரையில் பயணத்தை நிறைவு செய்தார். அதன்பின் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழைத் தேடி பயணம் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் சென்னை, சிதம்பரம், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் பரப்புரை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு, அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வந்தது.

இந்த தமிழைத் தேடி பயணம் நிகழ்ச்சியின் இறுதி நாள் பரப்புறையாக திருச்சியில் நேற்று முந்தினம் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் தமிழ் இல்லாதாதால் தமிழை தேடிய இப்பயணத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள வர்த்தக வியாபார நிறுவனங்களில் பெயர் பலகைகள் 10 பாகமாக பிரித்து அதில் 5 பாகம் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் 3 பாகம், ஆங்கிலமும் மீதமுள்ள 2 பாகம் அவர்கள் விரும்பும் மொழி அமைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். இது குறித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார்.

ஆங்கில வழி கல்வி நிறுவனங்கள் புற்று ஈசல் போல ஆங்காங்கே முளைத்து தமிழை சீரழித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் ஒரு மாத காலத்திற்குப் பிறகு கருப்பு மை ஏனி கொண்டு தமிழ் இல்லாத பெயர் பலகைகள் அனைத்தும் பாட்டாளி மக்கள் கட்சியை சார்பில் அழிக்கப்படும். பல்வேறு பணிக்கான தேர்வுகள் அதிகப்படியாக பிறமொழிகளில் வருவதை எதிர்த்து 17 ஆண்டுக்கு முன்பே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசு மாதிரி பள்ளிகளில் சேர நுழைவுத்தேர்வு: பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.