தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருள் விற்பனைக் கண்காட்சி பெரம்பலூர் நகராட்சி திடலில் இன்று தொடங்கியது. இதை மாவட்ட ஆட்சியர் சாந்தா தொடக்கி வைத்தார்.
இந்த விற்பனைக் கண்காட்சி அக்டோபர் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் பாக்கு மட்டைகள், துணிப்பை, நார் பைகள், அழகு சாதனப் பொருட்கள், ஸ்டேஷனரி பொருட்கள், சாம்பிராணி, பினாயில், எலந்த வடை, கமர்கட், எள்ளுருண்டை ஆகியவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சியில் மாலை 3 மணிக்கு முதல் இரவு 9 மணி வரை விற்பனை நடைபெறுகிறது.
இதையும் படிங்க; 'டீக்கடையில் சண்டை' - முன்னாள் பாஜக நிர்வாகி படுகொலை!