பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மேட்டூர் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இக்கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி பலமுறை அலுவலர்களுக்கு மனு அளித்துள்ளனர்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இக்கிராம மக்கள் இன்று (நவம்பர் 10) வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியரிடம் பட்டா வழங்க வேண்டி கோரிக்கை மனுவினை அளித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதையும் படிங்க: