எறையூர் சர்க்கரை ஆலை பகுதியைச் சேர்ந்த ஆனந்தன்(35). தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிர்திசையில் அடுத்தடுத்து வந்த ஜேசிபி லாரி, சரக்கு லாரி அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஆனந்தன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும், படுகாயமடைந்த ஜேசிபி லாரி, சரக்கு லாரி டிரைவர் உட்பட ஐந்து பேருக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்விபத்து குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் , ஆனந்தன் போக்குவரத்து விதிகளை மீறி சாலையின் எதிர்திசையில் வந்ததே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பெரியகுளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலி, 10 பேர் படுகாயம்!