விவசாயத்தை முதன்மையாகக் கொண்டது பெரம்பலூர் மாவட்டம் இங்கு பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம், நெல் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது, இந்தாண்டு ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. மேலும் இந்தச் சாகுபடி செய்யப்பட்ட நெல்லுக்கான அறுவடை காலம் தற்போது தொடங்கியுள்ளது.
வைக்கோல் விற்பனை செய்வதற்காக எந்திரத்தின் மூலமாகவே வைக்கோல்களைப் பிரித்தெடுத்து ஒரு கட்டின் விலை ரூபாய் 130-க்கு கொள்முதல்செய்யப்பட்டு ரூபாய் 200-க்கு விற்கப்படுகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கால்நடைத் துறை மூலம் வைக்கோல்கள் கொள்முதல்செய்யப்பட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் கொடுக்கப்பட்டது, ஆனால் தற்பொழுது ரூபாய் 200-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆகவே அரசு வைக்கோல்களைக் கொள்முதல்செய்து பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பவானிசாகர் அணையில் யானைகள் முகாம் - பொதுப்பணித் துறை எச்சரிக்கை..!