பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட கொளப்பாடி - மேலமாத்தூர் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதம மந்திரியின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் போடப்பட்டது. இந்த சாலையானது தற்போது பழுதடைந்த சாலையாக காணப்படுகிறது. மேலும் சுமார் 6.2 கி.மீ., தூரம் உள்ள இந்த சாலை தற்போது பராமரிப்பின்றி உள்ளது .
மேலும் இந்தப் பகுதியில் மழை பெய்தால் சாலையில் அரிப்பும், தொடர்ச்சியாக உள்ள பாலங்களின் தடுப்புச் சுவர்களில் விரிசலும், சாலையில் இருபுறமும் புதர் மண்டியும் காணப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனுஅளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், விரைந்து சாலையை சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: