ETV Bharat / state

பெரம்பலூரில் பெய்த மழையால் குளங்களில் நீர்வரத்து அதிகரிப்பு!

பெரம்பலூர்: பரவலாக பெய்த மழையால் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் குளம், குட்டைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் சராசரியாக 25.27 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.

rain
rain
author img

By

Published : Sep 2, 2020, 7:32 PM IST

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பருவமழைத் தொடங்கிவிட்ட காரணத்தினால் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக நேற்று (செப்.1) பாடநூலில் 83 மில்லி மீட்டர், லப்பை குடிகாடு 45 மில்லி மீட்டர், எறையூரில் 32 மில்லி மீட்டர், வேப்பந்தட்டைப் பகுதியில் 29 மில்லி மீட்டர், செட்டிகுளத்தில் 24 மில்லி மீட்டர், பெரம்பலூரில் 22 மில்லி மீட்டர், புதுவேட்டக்குடியில் 17 மில்லி மீட்டர், வி.களத்தூரில் 11 மில்லி மீட்டர், அகரம்சிகூரில் 8 மில்லி மீட்டர், கிருஷ்ணாபுரத்தில் நான்கு மில்லி மீட்ட,ர் தழுதாழைப் பகுதியில் மூன்று மில்லி மீட்டர் என மொத்தம் 278 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 25.27 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.

perambalur receives rainfall with average 25.27 millimeter
மழை நீர்

இதனிடையே பரவலாகப் பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளம் குட்டைகளில் தற்போது நீர் வரத் தொடங்கியுள்ளது. ஏரிகள், குளம், குட்டைகளில் நீர்வரத்து அதிகமானால், கிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையும் பாருங்க: ஆர்ப்பரித்து கொட்டும் அருவி: கழுகு பார்வையில் ஒகேனக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.